February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தெள்ளார் ஸ்ரீ திருமூலட்டாநேஸ்வரர் பாடல்கள் குறுந்தகடு வெளியீடு: புதுவை தமிழ்ச் சங்க தலைவர் பங்கேற்பு..!

வந்தவாசி, ஜன 28:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ திருமூலட்டாநேஸ்வரர் போற்றி திருப்பாடல்களின் குறுந்தகடு வெளியீட்டு விழா திருஞானசம்பந்தர் மடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு புதுவை தமிழ்ச் சங்க தலைவரும், தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி தலைவருமான கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கி, குறுந்தகடை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். புலவர் ந. பானு வரவேற்றார். மேலும் இந்த நிகழ்விற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டிகேஜி.ஆனந்தன், அறங்காவலர் குழு தலைவர் ஆர்.சீனிவாசன், நந்திவர்மன் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் குறுந்தகடை இந்து சமய மன்ற தலைவர் ஜெ.சச்சிதானந்தம் பெற்றுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், திரைப்பட பாடகர் முகேஷ், குறுந்தகடு இசையமைப்பாளர் தினகரன், வழக்கறிஞர் செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். குறுந்தகடை வடிவமைத்த கவிஞர் தெள்ளாறு எ.மணி ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வை கணினி ஆசிரியர் பா.சுரேஷ் தொகுத்து வழங்கினார். இறுதியில் நல்லோர் வட்டம் புலவர் திருவேங்கடம் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் முக்கிய பிரமுகர்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp