திருப்பூர்: மார்ச்-05
உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் இன்று 4.3.2026 ரோட்டரி திருப்பூர் காந்திநகர் மற்றும் ரோட்டரி திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி சார்பில், மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.. இதன்படி திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஜனநாயகி-2026 என்ற பெயரில் மகளிர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர்.வசந்தி வரவேற்றார்.
தலைமை விருந்தினர்களாக ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியை கற்பகம், தமிழ் ஆர்வலர் கோகிலா, இளவரசி. ரோட்டரி திருப்பூர் காந்திநகர் தலைவர் மணிமாறன். செயலாளர் ராஜகோபால்.
ரோட்டரி திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி தலைவர் அருள் செல்வம் நிர்வாக செயலாளர் பொங்குசாமி செயலாளர் தொடர்பாளர். ஹேமந்த் ஜெயின். ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாணவிகளுக்கு, குழு நடனம், சமையல், கோலம், கவிதை, நடனம், பாட்டு, மெகந்தி, உறி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election