April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூரில் துணி, நூல் வர்த்தக கண்காட்சி துவக்கம்.

திருப்பூர்: மார்ச்-21

மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியில்
பிளாஸ்டிக் பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்படும் பாலியஸ்டர் துணிகள் ,82 வகையான பாலியஸ்டர் நூல்கள், அலங்கார ஜவுளி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் பழங்கரையில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் விஷன் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் துணி, நூல் மற்றும் அசசரிஸ் வர்த்தக கண்காட்சி இன்று துவங்கியது வருகிற 21-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பாலிஸ்டர் பைபர்,துணி,நூல்,
பட்டன், லேஸ் உள்ளிட்ட அசசரிஸ்,அலங்கார ஜவுளி பொருட்கள் என பல முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது,
இந்த கண்காட்சியில் ஜவுளி துறைக்கான புதுவகை நூலிழைகள்,
நிலத்தடி நீரை பாழ்படுத்தும் பிளாஸ்டிக் பெட் பாட்டில்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, துகள்களாக்கி, உருக்கி பாலியஸ்டர் துணிகளாக மறுசுழற்சி செய்து அதிலிருந்து பாலிஸ்டர் பைபர், இசி பிட் எனும் ஏஐ தொழில்நுட்பத்து
டன் கூடிய செயலி, அதி நவீன ஜவுளி அலங்கார பொருட்கள், 85 வகையான நூல்கள் இந்த நூல் ஜவுளி கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளன.
இந்த கண்காட்சியை ஏராளமான பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், நூல் உற்பத்தியாளர்கள்,துணி வர்த்தகர்கள் திரளாக பார்வையிட்டு வருகின்றனர்.

இது குறித்து கண்காட்சியில் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ள டெல்லியை சேர்ந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் கூறுகையில் .

தங்களது தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயனுள்ள மூலப்பொருளாக மாற்றுவதன் மூலம் வட்டப் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குவதுடன் இத்தகைய மறுசுழற்சி மூலம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படுத்துகிறது, பிளாஸ்டிக் கழிவுகள் குறைக்கப்படுகின்றன, நிலப்பரப்பு மாசுபாடு தவிர்க்கப்படுகிறது…

Facebook
YouTube
Instagram
WhatsApp