July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பில் 21வது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி!!!10ம் தேதி துவக்கம். 300 கோடி வர்த்தக விசாரணை எதிர்பார்ப்பு.

திருப்பூர்-ஜூலை:07
திருப்பூர் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பாக CONSTRO MEGA 26 என்ற தலைப்பிலான கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி வருகின்ற 10ம் தேதி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவில் இன்ஜினியர் அசோசியேசன் தலைவர் ஜனார்த்தனன் மற்றும் கண்காட்சி தலைவர் ராஜு, திருப்பூரில் 21ஆவது கட்டட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 10ம் தேதி தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கிறது. இந்த கண்காட்சியில் தமிழக மற்றும் இந்தியாவில் உள்ள கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் சிறந்து விளங்கும் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கிறார்கள் இதில் கட்டடங்களுக்கு தேவையான செலவுகளை குறைக்கக்கூடிய புதிய வகையான பொருட்கள் ஏராளமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. பசுமை கட்டுமானம் சார்ந்த செங்கல் கம்பி சிமெண்ட் ரெடிமேட் கான்கிரீட் நிறுவனங்கள் மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்கள் எலக்ட்ரிக்கல் சோலார் லாக்கர் பலவிதமான கண்ணாடி வகைகள் மற்றும் புதிய பெண் வகைகள் என பல முன்னணி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள். பத்தாம் தேதி துவங்கும் இந்த கண்காட்சி ஆனது 13ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் 300 கோடிக்கும் அதிகமாக வர்த்தக விசாரணை நடக்கும் எனவும் 100 முதல் 120 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்…