சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி அருண் ராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்..
ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்ட அமைச்சர்..
திருச்செங்கோடு
ஜூன். 17
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயனாளிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருள்ராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்தார்.
விழாவில் கலந்து கொண்டு தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருண்ராஜ் பல்வேறு துறைகளின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, பல்வேறு திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குறிப்பாக மகளிர் உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் தொகை, விவசாயிகளுக்கான பல்வேறு நல திட்ட உதவிகள், உள்ளிட்ட திட்டங்களை அமைச்சர் அருண்ராஜ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது… தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் தலைமையில் இன்று மக்களுக்கான ஆட்சி அமைந்துள்ளது. இது மக்களின் ஆட்சி, இந்த ஆட்சியைப் பொறுத்தவரை நாங்கள் அனைவரும் உங்களுடைய பணியாளர்கள் தான், நீங்கள் தான் எங்களின் எஜமானர்கள்.
நம்முடைய நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்றைக்கு உங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது உங்களுடைய வரிப்பணம் தான். உங்கள் பணத்தை முறைப்படுத்தி உங்களுக்கே மீண்டும் வழங்குகின்றோம்.
நமக்கு கிடைத்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர், இளமையானவர், துடிப்பானவர் இவரின் நிர்வாகத்தின் மூலம் இன்னும் பல நலத்திட்ட உதவிகளை உங்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் கே ஜி அருள்ராஜ் பேசினார்.
அதன் பின்னர் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கத்தில், சுகாதார துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், திருச்செங்கோடு, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருள்ராஜ் விளக்கம் கேட்டார்.
இதனை தொடர்ந்து துறை அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.