February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திமுக

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகசார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 75 ஆண்டுபவள விழா கண்ட திமுக 1000 ஆண்டு காலத்திற்கு யாராலும் தொட்டுப் பார்க்க முடியாதஅளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்- முன்னாள் அமைச்சர் மாவட்ட கழகசெயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பெருமிதம்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர்கள் செஞ்சி கார்த்திகேயன், மயிலம் இள.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர்,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான்எம் எல் ஏ உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விழுப்புரம் மண்டல பொறுப்பாளரும் உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி குறித்தும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதைஎல்இடி திரை மூலம் திமுக நிர்வாகிகளுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றுதில் இருந்து இரவு பகல் பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உழைத்துக் கொண்டு வருகிறார் அந்த வகையில் விவசாயிகளுக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் திட்டங்களை இந்தியா மட்டும் இல்லை உலக நாடுகளே வரவேற்கின்றனறவகையில் முதலமைச்சரின் திட்டங்கள்தமிழ்நாடு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இது போன்ற திட்டங்களை ஒன்றிய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.மேலும் தற்போது ஒன்றிய அரசு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைசெயல்படுத்த உத்தரவிட்டப்பட்டுள்ளது.இந்தப் பணியின் போதுதிமுக நிர்வாகிகள் கவனமுடன் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணியை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் அந்த வகையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற முன்னெடுப்புடன் திமுக நிர்வாகிகள் பாக முகவர்கள் பூத் டிஜிட்டல் முகவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும் எனவும் ஒவ்வொருஊராட்சியிலும் முதலமைச்சரின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூற வேண்டும் அந்த வகையில் நாம் சரியாக உடல் உழைப்புடன் பணியாற்றினால் 100 சதவிதம்வாக்குகளில் 80 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணி கட்சிக்கு உறுதியாக கிடைக்கும்.திமுக நிர்வாகிகள் அனைவரும் கவனம் செலுத்தி திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை ஒவ்வொரு வீடாக எடுத்து சொல்லி வாக்குகள் சேகரிக்க வேண்டும் ,செஞ்சி மயிலம் திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில்மாபெரும் வெற்றி பெறுவதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
75 ஆண்டுபவள விழா கண்ட திமுக 1000 ஆண்டு காலத்திற்கு யாராலும் தொட்டுப் பார்க்க முடியாதஅளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பெருமிதம்தெரிவித்தார்.

கூட்டத்தில்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, சேது நாதன்,செந்தமிழ் செல்வன், தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவா,மாவட்ட துணை செயலாளர்கள் ரவிக்குமார், அருணகிரி, அமுதா ரவிக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், சீனி ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கதிரேசன், மணிவண்ணன், வீடு ரவி,சாந்தி ஏழுமலை, ,ஒன்றிய கழக செயலாளர் சொக்கலிங்கம், அண்ணாதுரை, ராஜா ராமன்,தயாளன், பழனி, ரவிச்சந்திரன், மணிமாறன், செழியன், துரை, இளம்வழுதி, பச்சையப்பன், விஜயராகவன், சாந்தி சுப்பிரமணியன், திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன்,செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்,அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், அனந்தபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் முருகன்,மாவட்ட அணி அமைப்பாளர்கள், ,பிரசன்னா, திலகவதி,ராஜசக்தி, திருமலை, கே. அண்ணாதுரை ,கே. எஸ். செந்தில்குமார், தமிழரசன்,ரோமியன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை,உள்ளிட்ட மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள்,அணி நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp