April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டமான நான் முதல்வன் திட்டத்தில் விவசாய ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்கள் குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று வருவதாகமுன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏதெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அண்ணமங்கலத்தில் உள்ள
சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் 17 வது கல்லூரி ஆண்டு விழா மற்றும்கல்லூரியில்முதலிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கூட்டரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அஞ்சஞ்சேரி கணேசன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணன், துணை தலைவர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பரசிவம், ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் முனைவர் ஹரிகுமார் அனைவரும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏகலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசுகையில் :

கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் முதலில் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும்.ஒழுக்கம் நேர்மை உண்மை உழைப்பு விசுவாசத்துடன் நாம் கல்வி கற்று உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் அந்த வகையில் விவசாய குடும்பத்தில் பிறந்த ஏழை மாணவி வீட்டில் கரண்டி பிடித்தவர் இன்று புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று, நான் முதல்வன் திட்டத்தில் 7500 பெற்று ,ஐஏஎஸ் படிப்பதற்கு 25000 பெற்று தேர்வு எழுதி இன்று ஒரு ஐஏஎஸ் ஆக தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார் .அந்த வகையில் கல்லூரி படிக்கும் மாணவ மாணவிகள் ஆகிய நீங்கள் இது போன்ற திட்டங்களில் பயனடைய வேண்டுமென முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில்முதுநிலை ஆசிரியர், ஊக்குமளிக்கும் பேச்சாளர் மில்டன்கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறுஆலோசனைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில்ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார்,மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், கல்லூரி துறைத்தலைவர்கள் ,உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ,கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கல்லூரி நிர்வாக அலுவலர்விஜயபாஸ்கர்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp