June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் படித்த மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக அளித்தனர்.

ஜூன் மத்தூர் 22.

தமிழக முதலமைச்சரின் 52 வது பிறந்த நாளை பயனுள்ள வகையில் கொண்டாட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் வேண்டுகோள் வைத்தார். அதன் அடிப்படையில் போச்சம்பள்ளியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளி விஜய் அவர்கள் சான்றிதழ்கள், கேடயம், வெள்ளிநாணயம் அளித்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து கௌரவித்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு முக கவசம், புடவை மற்றும் சால்வை அளித்து மரியாதை செய்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்
மாவட்ட செயலாளர் முரளி விஜய் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சேலம் மண்டல் இணை ஒருங்கிணைப்பாளர் சூர்யா கலந்து கொண்டனர்
ஒன்றிய செயலாளர்கள் பசுவராஜ், புஷ்பராஜ், சிவப்பிரகாசம் ஆகியோ சிறப்புரையாற்றினர். மேலும் கட்சி நிர்வாகிகள் சங்கர், சந்தோஷ், பன்னீர் ,வீரமன், திருப்பதி, சூர்யா, சண்முகசுந்தரம்
ராஜேஷ், சந்துரு, முத்துராசு அரவிந்தன், அரசு, விஜயகுமார், பார்த்திபன்
அரவிந்த் பண்ணந்தூர் பழனிச்சாமி, திருநீலகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் டி வி கே கட்சியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மாவட்ட செயலாளர் முரளிதரன் அவர்களுக்கு பர்கூர் சட்டமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கு கண்ணீர் மல்க தனது தெரிவித்துக் கொண்டார்

You may have missed