மணப்பாறையில்
அரசு மருத்துவமனைக்கு 10 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டம் பெற்று தந்த எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்
தேர்தல் பரப்புரையில் திமுக கூட்டணி வேட்பாளர் ப அப்துல் சமத் பேச்சு
சொன்னதை செய்யும் திராவிட மாடல் ஆட்சியில் மணப்பாறைக்கு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தந்த எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என திமுக கூட்டணி வேட்பாளர் ப அப்துல் சமத் தேர்தல் பரப்புரை








தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் மதச்சார்பற்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் இரண்டாவது முறை யாக இதே தெ தொகுதியில்களம் காண்கிறார்
தொடர்ந்து மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி துவரங்குறிச்சி உள்ளிட்ட ஒன்றியங்களில் தினம்தோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கிராமம் கிராமமாக சென்று கடந்த ஐந்து ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி திட்டங்கள் குறித்தும் செய்த சாதனைகள் குறித்தும் வாக்காளர்கள் மத்தியில் விளக்கிப் பேசி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
வையம்பட்டி ஒன்றியம் அஞ்சல் காரன் பட்டியில் காலை பிரச்சாரத்தை துவங்கிய வேட்பாளர் அப்துல் சமத் இளங்காகுறிச்சி அயன் ரெட்டியபட்டி குமாரவாடி தொப்பநாயக்கன்பட்டி வளையப்பட்டி சடையம்பட்டி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுட்டரிக்கும் வெயிலிலும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் பேசியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் வையம்பட்டி ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் நிழற்குடை நீர்நிலை தேக்க தொட்டி அங்கன்வாடி கிராம சாலை பாலங்கள் ரேஷன் கடை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக சட்டமன்ற உறுப்பினராக சிறந்த முறையில் செய்து மீண்டும் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் இன்னும் பல மக்கள் நலத்திட்டங்களை வையம்பட்டி ஒன்றியங்களில் செயல்படுத்திட மீண்டும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று சுட்டரிக்கும் வெயிலில் வாக்காளர்கள் மத்தியில் தீவிர வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்
குமாரவாடி ஊராட்சியில் தேர்தல் பரப்புரைக்கு வந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ப அப்துல் சமத் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதையுடன் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் கூட்டத்தில் குடியிருந்த மக்கள் வேட்பாளர் ப அப்துல் சமதுக்கு சிறப்பான வரவேற்பு தந்தனர் மேலும் வேட்பாளர் ப அப்துல் சமத் பேசுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்கு சிறப்பாக செய்துள்ளது குறிப்பாக பள்ளி குழந்தைகளுக் காலை உணவு திட்டம் தந்து தாய்மார்களின் வேலைப்பளுவை குறைத்து பெண்கள் போற்றக்கூடிய ஆட்சியாக நடத்திக் காட்டியவர் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
மீண்டும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் என்னை சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள் வையம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!