சேலத்தில் ஒரே மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 26 பேர் விபத்தில் மரணம்.
ஒரு மாதத்தில் 26 குடும்பங்களின் நிம்மதி போச்சு, ஹெல்மெட் அணியாவிட்டால் காத்திருக்கும் பேராபத்து.
கடந்த மாதத்தில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 26 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என சேலம் மாநகர காவல் ஆணையர் ஜோஷி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
சேலம் மாநகர காவல்துறை மற்றும் ஜேசிஐ சேலம் ஸ்டீல் நிறுவனம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் ஐந்து ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநகர காவல்துறை ஆணையர் ஜோஷி நிர்மல்குமார், அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, ஏழை எளிய வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஹெல்மெட் அணிதல், சாலை விதிகளை கடைபிடித்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகள் பின்பற்றுதல் குறித்து கடந்த 2 மாதங்களாக மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, 50 முதல் 60 சதவீதம் பேர் வாகனங்ளில் செல்லும் போது வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிகின்றனர். பெரும்பாலான சாலை விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்புகள் நேரிடுகின்றன. கடந்த மாதத்தில் சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் 26 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே, ஹெல்மெட் கட்டாயம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
இதில், மாநகர காவல் துணை ஆணையர் மகேந்திரன், போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஜானகி ராமன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…