August 1, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.

செஞ்சி ஆகஸ்ட் 02

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செகோவர் நிறுவனம் சார்பில் பெற்றோர் அல்லாத மாணவர்கள் மற்றும் ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு செக்கோவர் நிறுவனத்தின் இயக்குனர் அம்பிகா சூசைராஜ் தலைமை தாங்கினார்

நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன் , ரவீந்திரன், பிலிப் , அரசு, குலசேகர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பள்ளி கல்விக்கு தேவையான நோட்டு புத்தகம் பேனா பென்சில் வாட்டர் பாட்டில் டிபன் பாக்ஸ் ஸ்கூல் பேக் உள்ளடங்கிய பல்வேறு கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கி கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி உபகரணங்களை வழங்கிய செக்கோவர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்தனர்.
சமூக நலன் மற்றும் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செக்கோவர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் செக்கோவர் நிறுவன ஊழியர்கள் கோட்டீஸ்வரி , சங்கீதா , பிரசன்னா, ஞானம். சக்திவேல் சுரேஷ் பாபு விஜயரங்கன் கவியரசன் சூரியா சிவாநந்தம் பிரபாகரன் ஆசிரியர் வேணி மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.