August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – புதுச்சேரியில் 20-வது Pharma Lab Chem Expo

சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், புதுச்சேரியில் 20-வது Pharma Lab Chem Expo கண்காட்சி வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதுகுறித்து Exhibition Media Private Limited நிறுவனத்தின் இயக்குநர் ராஜீவ் குமார் சுக்லா, நிறுவனத்தின் பிரதிநிதி அஜித் குமார் சுக்லா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவி அண்ணாமலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:Exhibition Media Private Limited சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில், Pharma Chemicals, Pharmaceutical Machinery, Laboratory Equipment, Analytical Equipment, Glassware மற்றும் Laboratory Chemicals உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற உள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 100 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. புதுச்சேரி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 3,000 பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த கண்காட்சி மிகப்பெரிய வாய்ப்பாக அமையும். Pharma மற்றும் Laboratory துறையில் தொழில் தொடங்க தேவையான இயந்திரங்கள், உபகரணங்கள், ரசாயனங்கள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் பார்வையிட்டு, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாக கலந்துரையாடி தொழில் வாய்ப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே சிறு தொழில் செய்து வருபவர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்தவும் இந்த கண்காட்சி உதவியாக இருக்கும். Startup நிறுவனங்களை தொடங்க விரும்புவோருக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தகவல்கள் கிடைக்கும்.பொதுவாக Pharma மற்றும் Laboratory துறை சார்ந்த இதுபோன்ற பெரிய அளவிலான கண்காட்சிகள் மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடைபெறும். தற்போது புதுச்சேரியில் தேசிய அளவிலான நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுவது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.Laghu Udyog Bharati – Puducherry மற்றும் Pondicherry Drug Manufacturers Association (PDMA) ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

புதுச்சேரியில் புதிய தொழில்கள் உருவாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் அதிகரிக்கவும் இதுபோன்ற தொழில் கண்காட்சிகள் உதவும். எனவே புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், தொழில்முனைவோர், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் இந்த கண்காட்சியில் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.கண்காட்சி 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. புதுச்சேரி மரப்பாலம் அருகே உள்ள சுனியா கன்வென்ஷன் ஹாலில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியின் தொடக்க விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜீவ், முன்னாள் அமைச்சர் ஜான் குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.“தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதுச்சேரியில் புதிய தொழில்கள் உருவாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் அனைவரும் இந்த கண்காட்சியில் பங்கேற்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர். இறுதியாக ரவி அண்ணாமலை நன்றி தெரிவித்தார்