April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா..!

வந்தவாசி, மார்ச் 28:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவாக வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமை தாங்கினார். தெள்ளார் வட்டார கல்வி அலுவலர்கள் கோ.குணசேகரன் எ.பச்சையப்பன், தெள்ளார் ரோட்டரி கிளப் சாசன தலைவர் டிகேஜி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை பாரதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர்(செய்யாறு) சி.வீரமணி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் கோவில்பட்டி பட்டிமன்ற பேச்சாளர் டி.அன்னபாரதி பங்கேற்று, இன்றைய மாணவர்களின் கற்றல் நிலைகள் பற்றி நகைச்சுவை உணர்வுடன் விளக்கி கூறினார். மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.தமிழ்நேசன், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆசிரியர் பயிற்றுநர் பாலாஜி, மாவட்ட கருத்தாளர் மதியழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் த.தமிழ்ச் செல்வி, துணைத் தலைவர் கு.துர்கா தேவி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியில் கல்வியாளர் பொன்.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp