காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு. ஆகஸ்ட் 25
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. இதனை காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளை முன் நின்று நடத்தியது.
பல்வேறு சாலை விழிப்புணர்வு குறித்தும், சாலையில் வாகனங்களை ஓட்டும் பொழுது மது அருந்திவிட்டு ஓட்டுவதை தவிர்க்கவும், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குவது, சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வாகனங்களை ஓட்டுவது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவதை தவிர்க்கவும் உள்ளிட்ட பல்வேறு சாலை விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி இந்த சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஈரோடு அருகே உள்ள சோலார் ரவுண்டானா பிரிவு ரோட்டில் இருந்து ஊர்வலமாக சென்று சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது
இந்த சாலை விழிப்புணர்வு பேரணியானது மொடக்குறிச்சி ரோட்டில் சென்று லக்காபுரம் நான்கு ரோடு சந்திப்பில் முடிவடைந்தது.
இந்த சாலை விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊர்வலத்திற்கு ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சாந்தாதேவி தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு காக்கும் கரங்கள் மக்கள் நல அறக்கட்டளையின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…