கோவை: பிப்-11
இந்த பேரணியை மாணவர் மாவட்ட திமுக செயலாளர் துரை செந்தமிழ் துவக்கி வைத்தார். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நான்கு சட்டத் தொகுப்புகளையும், விதிகளையும் ரத்து செய்யக்கோரியம், விவசாயிகள் விரோத விதை மசோதா மற்றும் மின்சார திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும், கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு பிஎப் இ எஸ் ஐ திட்டங்களை அமலாக்க கோரியும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் பேரணி நடைபெற்றது. உடன் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் உடன் தங்கவேல்,செல்வராஜ், துரை,ஆனந்த், தமிழ்ச்செல்வன், மனோகரன் (எச்எம்எஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை வி ஓ சி பார்க் அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கோவை மாவட்டம் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் கோரிக்கை விளக்க இரு சக்கர வாகன பேரணி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பேரணி நடைபெற்றது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!