September 11, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரம் கரியாம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள கே.7080 பி.கரியாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் டாப்செட்கோ மற்றும் டாம்கோ மாற்றுத்திறனாளி கடன் மேளா நடைபெற்றது.

இதில் சங்கத்தின் செயல் எல்லையில் வசிக்கும் பொது மக்களுக்கு ரூபாய் 50,000, வீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடனும்,பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு மிகக் குறைந்த வடடியில் புதிதாக தொழில் தொடங்கவும்,தொழில் விரிவாக்கம் செய்திடவும் கடன் தரப்படுகிறது.

இம்முகாமில் பலர் கலந்து கொண்டு லோனுக்கான விண்ணப்பங்கள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் வசம் வழங்கினார்கள்.உடன் துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.