வந்தவாசி, மார்ச் 31:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது. முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு கோவிலில் விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.

More Stories
ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகர் அருள்மிகு ஸ்ரீ அழகு மாரியம்மன் கோவில் திருவிழா..
அரியலூர் – லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நந்தியம்பெருமான் சுயசாம்பிகை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்