மத்தூரில் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா எழுச்சியுடன் கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்கா மத்தூர் ஒன்றியத்தில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மத்தூர் ஒன்றியச் செயலாளர் க. சக்கரவர்த்தி அவர்கள் தலைமை தாங்கி, ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கலந்துகொண்ட முக்கிய நிர்வாகிகள்:
இந்த விழாவில் ஏராளமான கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் அவைத்தலைவர் செல்ல கிருஷ்ணன்
ஒன்றிய துணைச் செயலாளர் இம்தியாஸ் ஷாஜகான்
மாவட்ட பிரதிநிதிகள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பூங்கொடி ஆறுமுகம்
மாவட்ட சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் விநாயகமூர்த்தி, எம்.ஆர். முனுசாமி
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் சிவம்பட்டி
ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பாண்டியன்
எம்.ஜி.ஆர் மன்றம் முருகன்.
ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் மாதையன் புவனேஸ்வரி மேலும், கோடிபதி மணி, நாகம்பட்டி முன்னாள் தலைவர் நடராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் துரைராஜ், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் சக்தி, ஓட்டுநர் அணி செயலாளர் தண்டபாணி, கலர்பதி பூபதி, பிரகாசன், ம.இ. பகதூர், குமார், கணேசன், நடுப்பட்டி செந்தில், கனகானூர் தர்மலிங்கம் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..