அனுமதியின்றி டிப்பர் லாரியில் மண் கடத்தியவர் கைது – வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அனகோடி காட்டுப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை அனுமதியின்றி டிப்பர் லாரியில் மண் ஏற்றி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாகரசம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையிலான போலீசார் இன்று காலை 5 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
விசாரணையில், அரசு அனுமதி மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி மண் எடுத்து கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், லாரி ஓட்டுநரும் உரிமையாளருமான சின்னசாமி மீது சட்டவிரோதமாக மண் கடத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சம்பவம் குறித்து நாகரசம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுமதியின்றி இயற்கை வளங்களை அகழ்வு செய்து கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது