கம்பத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:-தேனி. ஜூன்.28-சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக, கம்பம் நகரில் ரேச்சல் மெர்சி சுகந்தா அறக்கட்டளை மற்றும் ரேஷ்மா மெடிக்கல் மிஷன் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. கம்பம் காந்தி சிலை முன்பு தொடங்கிய பேரணியானது அரசமரம், ஏகேஜி திடல், எல்.எப்.மெயின்ரோடு வழியாக பழைய தபால் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கையில் போதைப் பொருட்களுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். மேலும், போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.முன்னதாக போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்கும் விதமாக, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.மேலும் போதை பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது