June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி கிழக்கு அமமுக மாவட்ட துணைச் செயலாளராக வி.பாலையா நியமனம்

கிருஷ்ணகிரி, ஜூன் 28:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக வி.பாலையா நியமிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அவ்வை வி.சுரேஷ் அளித்த பரிந்துரையின் பேரில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இந்த நியமனத்தை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய மாவட்ட துணைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள வி.பாலையா, கழகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், மாவட்டத்தில் அமைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவார் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து அமமுக நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வி.பாலையாவுக்கு நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் மூலமும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், கட்சித் தலைமையின் நம்பிக்கையை நிறைவேற்றி, மாவட்டத்தில் அமமுகவை மேலும் பலப்படுத்தும் வகையில் தீவிரமாக செயல்படுவேன் என்று வி.பாலையா தெரிவித்துள்ளார்.