ரூ.10.42 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்
அமைச்சா் தொடங்கி வைத்தார்.
திருப்பூர், ஜன. 04:
திருப்பூர் மாவட்டம். காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பாப்பினி ஊராட்சி, பச்சாபாளையத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தாட்கோ மூலம் ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி மற்றும் முள்ளிபுரம், அரசுக்கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள சீமை கருவேலம்மரங்கள் அகற்றும் பணி,
காங்கேயம் நகராட்சி, வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தை கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினா் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
காங்கேயம் வாரச்சந்தை வளாகத்தில் தினசரி சந்தை கடைகள் மற்றும் வாரச்சந்தை கடைகளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சி 22:198 ச.கி.மீட்டர் பரப்பளவில் 43,182 மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்த நகராட்சியில் திங்கள் கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
இதனை மேம்படுத்தும் வகையில் காங்கயம் நகராட்சி தினசரி மற்றும் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்கெட்டில் 10×16 அடி அளவுள்ள 47 கடைகள்.
10×16 அடி அளவுள்ள 8 இறைச்சிகள், 10 x 20 அடி அளவுள்ள 1 உணவக கடை மற்றும் வாரச்சந்தையில் 10×10 அடி அளவுள்ள 294 தரைதள கடைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் கழிப்பிடம் போன்ற அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் காங்கேயம் நகராட்சிக்கு புதிய அலுவலகம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. காங்கேயம் நகராட்சிக்கு கூடுதலாக 9 குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.36.00 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் எனது சார்பிலும், காங்கேயம் தொகுதி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவா் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) ராஜாராம், செயற்பொறியாளர் (தாட்கோ) அருண்குமார், காங்கேயம் நகர்மன்றத்தலைவர் சூரியபிரகாஷ், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் பால்ராஜ், நகராட்சி பொறியாளர் குணசீலன், காங்கேயம் வட்டாட்சியர் தங்கவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர், மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனா்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!