வந்தவாசி, ஜூலை 28:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு சங்க தலைவர் வந்தை குமரன் தலைமை தாங்கினார். கவிஞர் பூங்குயில் சிவக்குமார், எக்ஸ்னோரா மாவட்ட பொறுப்பாளர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் முகமது ஜியா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, எக்ஸ்னோரா கிளை தலைவர் சு. தனசேகரன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுவை தமிழ்ச் சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து அவர்களின் பிறந்தநாள் விழா, சட்ட வட்ட பணிக் குழு தன்னார்வ உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சு.தனசேகரன், எம்.ஹாஜிரா, ம.சுரேஷ்பாபு ஆகியோருக்கு பாராட்டு விழா, கவிஞர் வந்தை குமரன் பிறந்தநாள் விழா உள்ளிட்டவைகள் குறித்து வாழ்த்துரை வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா, சமூக ஆர்வலர்கள் நடேச பெருமாள், நல்லாசிரியர் ம.ரகுபாரதி, கவிஞர் தமிழ்ராசா, கோல்டு லீப் எக்ஸ்னோரா நிர்வாகி எம்.பி.வெங்கடேசன், முதுகலை ஆசிரியை பூவிழி, ஆக்ஸ்போர்டு ஸ்போக்கன் இங்கிலீஷ் மைய நிர்வாகி கு.சதானந்தன், கருவூல அதிகாரி சத்யமூர்த்தி, திரைப்பட இயக்குநர் வந்தை பிரேம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன், சமூக ஆர்வலர் மனோஜ் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

More Stories
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தாராபுரம் நகராட்சியில் நிரந்தரமாக நகராட்சி ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்!!!ரூ553.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியானது 95% முடிக்கப்பட்டுள்ளது மீதம் 5% பணிகள் மட்டுமே முடிக்கப்படாமல் உள்ளது!!