கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் இன்று மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு வருகை தரும் அரசு அலுவலர்களிடம் பகுதி சார்ந்த கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாநில செய்தியாளர்: J.P. பசுபதி

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…