திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார்..
ஈரோடு. ஏப்ரல். 03
நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சு. முத்துசாமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில் 2026 வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக மதசார்பற்ற கூட்டணி அமைத்து வேட்பாளர்கள் அறிவிக்க ப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோட்டில் உள்ள எட்டுத்தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை நேற்று திமுக தலைவரும் முதலமைச்சர் ஆன மு க ஸ்டாலின் ஈரோடு அருகே உள்ள திண்டல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான சு. முத்துசாமி, ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலகத்தில், மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியர் தலைவர் ஆன சிந்துஜாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி கந்தசாமி, திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ், முன்னாள் எம்எல்ஏ விசி சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..