July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

430 மனுக்கள் வரப்பட்ட நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு..

ஈரோடு. ஜூலை. 20

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பொதுமக்களுக்கான, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக ஆட்சியரிடம் கொடுத்தனர்.

மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் கூறுதல், தங்கள் பகுதிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு பிரச்சனை, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, சாக்கடை வசதி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 430 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இந்த மனுக்களை ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, பல்வேறு துறைகள் சார்பிலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.