275 மனுக்கள் வரப்பெற்ற நிலையில் மேல் நடவடிக்கைகளுக்கு உத்தரவு..
ஈரோடு. ஜூன். 16
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 275 மனுக்கள் பெறப்பட்டு மேல் நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வாரம் தோறும் திங்கட்கிழமை காலை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களுக்கான மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் வழங்கினர்.

இதில் இலவச வீட்டு மனை மற்றும் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கல்வி உதவித்தொகை, தங்கள் பகுதிகளுக்கு தேவையான சாக்கடை வசதி, சாலை வசதி, திருவிளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினர்.
மேலும் காவல்துறை சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை ஆட்சியர் கண்ட சாமி வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் மட்டும் பறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.