February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு

கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஓடாநிலையில் அளித்த பேட்டி..

ஈரோடு மாவட்டத்தில் அரச்சலூர் அருகே உள்ள ஓடநிலை வீரம் நிறைந்த மண். பல போர்களில் ஆங்கிலேயரை துரத்தி அடித்த தீரன் சின்னமலை கோட்டை கட்டி வாழ்ந்த மண். இங்கு கோட்டை கட்டி வாழ்ந்து இருக்கிறார். அப்படிப்பட்ட தீரன் சின்னமலைக்கு கடந்த காலத்தில் மணி மண்டபம் அமைத்து ஆடி 18 அன்று அரசு விழா நடத்தி சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

தீரன் சின்னமலைக்கு சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டு உள்ள சிலையை பார்த்தவர்களுக்கு தெரியும். அதே போன்று கம்பீரத்துடன் ஓடாநிலையிலும் சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இன்று கோரிக்கை நிறைவேறி இருக்கிறது. கம்பீரமான தீரன்சின்னமலை சிலை அமைக்கப்பட்டு முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

தானாகவே தீப்பற்றி கொள்வது போல் இளைஞர்கள் ஓடாநலை நோக்கி வருவது இயல்பு.
கம்பீரமான இந்த சிலையை ஓடாநிலையில் வைத்து எங்கள் கோரிக்கையைல நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

அதே போன்று நாமக்கல்லில், சென்னை ராஜதானி பிரதம அமைச்சராக இருந்த டாக்டர்..சுப்பராயன்னுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சியும், கரூரில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு விவசாயிகளுக்கு தங்களை அர்ப்பணித்து கொண்டவருக்கு சிலை திறப்பு நடக்கிறது. கொ.ம.தே.க சார்பில் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்க காரணம் என்ன?

மகளிர் உரிமைத்தொகை மாதம் 1000 என்பது சிறப்பான திட்டம். ஆண்கள் கையை எதிர்பார்க்காமல் பயன்படுத்தி வந்தனர்
தேர்தல் வருவதால் தேர்தல் அறிவித்தவுடன் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நிகழ்வுகள் சென்றுவிடும். அப்போது நீதிமன்றம் வாயிலாக இந்த திட்டத்தை நிறுத்தி விடலாம் என்பதை அறிந்த முதலமைச்சர், கோடை காலங்களிலும், பள்ளி, கல்லூரி விடுமுறை காலங்களில் பெண்கள் கஷ்டபட்படக்கூடாது என நினைத்து முதலமைச்சர் கோடை காலத்திற்குமாக சேர்த்து 5 மாத உரிமைத்தொகை வழங்கி இருக்கிறார..

இப்பொது இந்த உதவித்தொகையை கொடுக்காமல் இருந்தால் தடுக்க கிளம்பி இருப்பார்கள். கொடுத்த பிறகு அறிவித்து உள்ளதால் இனி்தடுக்க முடியாது. தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தை குறை சொல்ல முடியுமா?

இந்த திட்டத்தை விமர்சனம் செய்தவர்கள் இருக்கிறார்கள். முதன்முறையாக கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. மற்ற மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். ஜூன் மாதத்தில் இருந்து 2000 ரூபாய் வந்துவிடும் என்று நம்பிக்கையில் உள்ளனர். அதை பொறுக்க முடியாதவர்கள் தடுக்க நினைக்கின்றனர். வரும் தேர்தலில் அதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

தேர்தல் அறிவித்தால் அரசு ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் முதலமைச்சர் உடனடியாக 5000 ரூபாயை கொடுத்து உள்ளார். தேர்தலுக்காக கொடுத்தார் என விமர்சனம் செய்தாலும் கவலை இல்லை. இன்று மக்களுக்கு 5000 ரூபாய் கிடைத்து உள்ளது.

வரும் தேர்தலில் எத்தனை தொகுதிகள் என்பது கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளே பேச வேண்டிய விசயம். இதை பொதுவெளியில் பேச கூடாது. தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு தாங்களே தீ வைத்து கொள்வது போன்றது. கூட்டணி தலைவர்களுடன் பேசி முடிவு செய்து அறிவிக்க வேண்டும். தனியாக பேச கூடாது. அப்படிப்பட்ட நாகரீகத்துடன் அனைவரும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

தவெக கூட்டத்திற்கு மட்டும் எதற்கு இவ்வளவு கட்டுப்பாடு?

ஒரு கூட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டால் இவ்வளவு பேர் தான் கூட முடியும் என்பது காவல்துறை கணிப்பு. தவெக சார்பில் ஒரு இடத்தை தேர்வு செய்து கேட்ட போது ,5000 பேர் மட்டுமே கூட முடியும் என்று கூறி விட்டார்கள். இது பொதுக்கூட்டம் இல்லை. நிர்வாகிகள் கூடும் கூட்டம் தான். நிபந்தனைகள் அனைவருக்கும் பொதுவானது. இதை குறை கூறுவது விளம்பரம் செய்வது தான். நாங்கள் நடத்திய அத்தனை பொதெக்கூட்டத்திற்கும் நிபந்தனைகள் உண்டு. தவெகவினர் விளம்பரத்திற்காக பேசி வருகின்றனர்

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை அதிகம் கேட்டு போராடி வருகின்றனர். அவர்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். அவர்களுடன் சேர்ந்து போராட தயாராக இருக்கிறேன்.

மக்களுக்கான தேவைகளை தேர்தல் வந்தால் 15 நாட்களில் நடந்து விடும் என மக்கள் நினைக்கின்றனர். அதனால் தான் அது மாதிரி காலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் கண்டிக்கிறேன்

Facebook
YouTube
Instagram
WhatsApp