விழுப்புரம் மார்ச் 01
விழுப்புரம் இ.எஸ் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ் கல்வியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா 2026 நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். இ.எஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் தே.செந்தல்முருகன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவிற்கு சிறப்பழைப்பாளராக அறிஞர் அண்ணா அரசுக் கலை (ம) அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுமார் முனைவர் சிவராமன் துணை பேராசிரியர் மதன்மோகன் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் சச்சிதானந்தம் விரிவுரையாளர் . மணிவர்மன் அவர்களும் விழாவை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சி.அய்யனார், ஆர்.சண்முகசாமி, ச.சுகதேவ், தமிழ்செல்வி, அ.அருள் மாவட்டச் செயலாளர் வே.பாலமுருகன் பூமிகலைக்குழுமேனாள் மாவட்ட தலைவர் ஜி.சேகர் மாவட்ட கல்விக்குழு பேராசிரியர் கே.பூபதி அவர்களும், மேனாள் மாநிலத் தலைவர் முனைவர் சு.தினகரன் அவர்களும், மாவட்டத் தலைவர் எஸ். சிவமுருகன் மாவட்ட நிர்வாகிகள் க.செவ்வந்தி, சு.தென்னரசு, சு.சுமதி, ஜெ.ஜெயபாஸ்கர், ஷர்மிளாதேவி, அறிவியல் பிரச்சார உபக்குழு ஒருங்கிணைப்பாளர் சே.முருகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.ராஜ்குமார் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து அறிவியல் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கருத்துகளை வழங்கினார்கள். இதில் பூமிகலைக்குழுவின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இ.ஸ் கல்வியியல் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும் நடத்தினார்கள் இதில் மாநிலத் தலைவர் மருத்துவர் த. திருநாவுக்கரசு பரிசளித்து பாராட்டுரை வழங்கினார். மேலும் இஎஸ் கல்வியியல் கல்லூரி மாணவர்களின் கற்பித்தல் கற்றல் துணைக்கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிடல் செய்தனர். இவ்விழாவில் இ .எஸ். பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் இந்திரா கல்லூரியின் நிர்வாக அதிகாரி குப்புசாமி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து 700 மாணவ மாணவிகளும், இ.எஸ். கல்வியியல் கல்லூரி துணை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் சங்கரநாராயணன் நன்றியுரை வழங்கினார்.

More Stories
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!
பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்பி கணபதி ராஜ்குமார்..