October 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​அரியாங்குப்பத்தில் சாலை மேம்பாட்டுப் பணி: சட்டமன்ற உறுப்பினர் ஆர். பாஸ்கர் தலைமையில் பூமி பூஜை!

​ புதுச்சேரி, பிப்ரவரி 02:

அரியாங்குப்பம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய சாலைப் பணிகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.
​நிகழ்ச்சி விவரம்:
இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணி அளவில், அரியாங்குப்பம் சிக்னல் புறவழிச்சாலை (வாட்டர்டேங்க்) அருகே சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
​
இந்த விழாவிற்கு அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. R. பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி, பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.
​
இந்த நிகழ்ச்சியில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
​
முக்கிய போக்குவரத்து சந்திப்பான இப்பகுதியில் சாலை மேம்படுத்தப்படுவதன் மூலம், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, வாகன ஓட்டிகளின் பயணமும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.