February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்

அரியலூர் அண்ணா சிலை அருகே மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்களை பாதிக்கும் வகையிலும் பெரும் முதலாளிகளுக்கு லாபத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வழியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் இதனையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் ஆத்திரமடைந்த தொழிற்சங்கத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp