August 2, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

அறந்தாங்கி.ஆக 2

புதுக்கோட்டை மாவட்டம்
ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பெற்றது.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியருக்காக அண்மையில், வல்லத்திராக்கோட்டை பொறியியல் கல்லூரியில் ஒரு வார கால பேரிடர் மேலாண்மை பயிற்சியை வழங்கின.

இப்பயிற்சியில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 26 பேர் பங்கேற்று, பயிற்சியை நிறைவு செய்து வந்தனர்.அவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை, பாராட்டுகளைத் தெரிவித்தார்.
துறைத்தலைவர்கள் முனைவர் து.சண்முகசுந்தரம், முனைவர் கா.காளிதாஸ், அ.கணேசன், முனைவர் பா.கிளாடிஸ், முனைவர் ரா.பிரகதாம்பாள் உள்ளிட்ட பேராசிரியர்கள், முனைவர் ச.ரமேஷ், மு.பழனித்துரை ஆகிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், அலுவலகப்பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

செய்தியாளர்
பழனிவேல்