சீனியா்களுக்கு ரூ.695, ஜுனியா்களுக்கு ரூ.495 வேட்டி சட்டை காம்போ
ராம்ராஜ் காட்டன் நிறுவனா் அறிமுகம் செய்தார்
திருப்பூர், ஜன. 1:
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் ஆண்டுதோறும் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதிய ரகம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் உள்ள ராம்ராஜ் காட்டன் தலைமை அலுவலகத்தில் மேட்சிங் மென்ஸ் கலெக்சன் சீனியா் செட் ரூ.695க்கும், குழந்தைகளுக்கு 495 ரூபாய்க்கும் என வேட்டி மற்றும் சட்டை காம்போ அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் அறிமுகப்படுத்தினார். இதில் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி மற்றும் பேரன்கள் ஆரவ் மற்றும் ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னா் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் நிருபா்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவா் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து ராம்ராஜ் ஷோரூம் மற்றும் அனைத்து முன்னணி கடைகளில் மேட்சிங் வேட்டி சட்டைகள் ரூ.695க்கும், சிறுவர்களுக்கான மேட்சிங் செட் ரூ.495 க்கும் விற்பனை செய்யப்படும். நமது சுதேசி மற்றும் கலாச்சாரம் வளர வேண்டும் என குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் வேட்டி வாரத்தில் பங்கெடுத்து நெசவாளர்கள் வாழ்வை சிறக்க வைக்க வேண்டும்.
ரூ.595 மற்றும் ரூ.695க்கு கல்ச்சர் கிளப் கலர் சர்ட்டுடன் வேட்டிகள் மற்றும் கலாச்சாரத்தை பிறப்பிலிருந்து ஊக்கப்படுத்த உறுதிப்படுத்தும் விதமாக ரூ.395 மற்றும் ரூ.495 க்கு லிட்டில் ஸ்டார் கலர் சர்ட்டுகள் மேட்ச்சிங் பார்டர் வேட்டிகளும் பிரத்தியேகமாக இந்த ஆண்டு வேட்டி வாரம் 2026ல் விற்பனைக்கு கிடைக்கப்பெறுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவா் கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!