புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வில்லியனூர் தொகுதியின் என்.ஆர். காங்கிரஸ் (AINRC) வேட்பாளர் ரவிக்குமார், இன்று தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வில்லியனூர் மற்றும் அரும்பாத்தபுரம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு கேட்டார். செல்லும் வழியெங்கும் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மலர் மாலைகள் அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் ரவிக்குமார் மக்களிடம் பேசுகையில்:
“தொகுதியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் அனைவரும் வரும் தேர்தலில் தவறாமல் ‘ஜக்கு’ சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த அப்பகுதி மக்கள், “வில்லியனூர் தொகுதியில் நிச்சயம் ஒரு மாற்றம் தேவை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். இம்முறை அந்த மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள்,” என அவரிடம் நம்பிக்கை தெரிவித்தனர்.
திரளான தொண்டர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த பிரசாரம், தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..