நட்பு, உடல்நலம் மற்றும் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ரொட்டேரியன்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!!
கோவை: ஏப்-04
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அறம் மற்றும் ரிவர்சைடு பப்ளிக் ஸ்கூல் இணைந்து நடத்திய “சூப்பர் ஓவர் – சீசன் 2” கிரிக்கெட் போட்டி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது…
40 வயதுக்கு மேற்பட்ட ரோட்டேரியன்கள் கலந்து கொண்ட இந்த போட்டி, நட்பு, உடல்நலம் மற்றும் கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.
“ஐஸ்வர்யம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் கப்” ஆதரவுடன் நடைபெற்ற இந்த போட்டி துவக்க விழா, மாவட்ட ஆளுநர் செல்லா கே. ராகவேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அறம் தலைவர் கே.ஜி.ஸ்ரீராம், செயலாளர் ரஜீல் அப்துல் ரஹ்மான், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.சந்திரமௌலி,ஆகியோர் முன்னி்லை வகித்தனர்..
இதில் முக்கிய விருந்தினர்களாக TNCA தலைவர் டி.ஜே. ஸ்ரீனிவாச ராஜ், செயலாளர் யு. பகவந்தாஸ் ராவ், முன்னாள் செயலாளர் ஆர்.ஐ. பழனி மற்றும் SNR குழும டிரஸ்டி சுந்தர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர்.
மனிதநேய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த போட்டியின் மூலம் திரட்டப்பட்ட நிதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு உதவியாக வழங்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
சூப்பர் ஹீரோஸ் சேலஞ்ச்” போட்டியாக நடைபெற்ற இதில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீர்ர்களுக்கு பரிசுகள்,கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது…

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election