April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முதலமைச்சர் ரங்கசாமியின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன்பெறுகிறார்கள் என்று லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜீவானந்தபுரம்மற்றும் நந்தா நகர் பகுதியில்பிரச்சாரம் மேற்கொண்டஎன்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்

புதுச்சேரி லாஸ்பேட்டை சட்டசபை தொகுதியில் என்.ஆர்.காங்கி ரஸ் சார்பில் முன்னாள் சபா நாயகர் சப்தகிரி வி.பி.சிவக் கொழுந்துபோட்டியிடுகிறார். அவர் அவர் ஜீவானந்தபுரம் பகுதியில் உள்ள ஜலமுத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து ஜீவானந்தபுரம் மற்றும் நந்தா நகர் பகுதியில்‘ஜக்கு’சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது அவர் கூறும்பொழுது
முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 5 ஆண்டுகால ஆட்சி யில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி திட் டத்தை செயல்படுத்தியுள் ளார். உயர்கல்வி படிக்க மாணவ- மாணவிகளுக்கு இல வச மடிக்கணினி வழங்கியுள்ளார். காலை, மதியம், மாலை உணவு திட்டங்கள், சீருடை-நோட்டு புத்தகங்கள், காலணி கள் சைக்கிள், சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், பொறியியல் மற் றும்உயர் தொழில்நுட்பகல்வி பயில்பவர்களுக்கு நிதி உதவி என வருங்காலத்தைகருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத் தியுள்ளார்.
இந்த திட்டங்களால் ஒவ் வொரு குடும்பத்தை சேர்ந்த வர்க வர்களும் பயனடைந்துள்ள னர். இந்த திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்திட புதுச்சேரியில் தேசிய ஜனநா யக கூட்டணி ஆட்சி தொடர வேண்டும். வருகிற தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி யின் கரத்தை வலுப்படுத்த
எனக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்
பிரசாரத்தின்போது சப்த கிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் சப்தகிரி வி.பி.எஸ்.ரமேஷ்குமார். என். ஆர்.காங்கிரஸ், பா.ஜக அ.தி.மு.க. லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர், சப்தகிரி அறக்கட் டளை நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், இளைஞர் அணியினர், வீடு வீடாக சென்று வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கிய துண்டு பிரசுரங் வழங்கி ஓட்டு கேட்டனர்.
முன்னதாக என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் வி பி
சிவக்கொழுந்து பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத் தும், மலர் தூவியும்
ஆளுயர மாலை அணி வித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp