April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மு. க. ஸ்டாலின் ஆட்சி தொடர்வதற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

திமுக வேட்பாளர் செஞ்சி மாஸ்தான் எம்.எல்.ஏ வேண்டுகோள்.

செஞ்சி,ஏப்ரல்.3-

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் செஞ்சி கிழக்கு ஒன்றியம் தென்புதுப்பட்டு, கொம்மேடு ஆகிய ஊராட்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வாக்காளர்களிடம்
மாவட்ட கழகசெயலாளர் திமுக வேட்பாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ வாக்குசேகரித்து பேசுகையில்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களையும் சொல்லாத திட்டங்களையும் படிப்படியாக நிறைவேற்றி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் அதில் முதலமைச்சரின்
காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும், மகளிர் உரிமைத் தொகை மாதம் 2000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை 1200 லிருந்து 2000 ஆகவும், மாற்றுதிறனாளிகளுக்கு 1500 லிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்,இல்லத்தரசிகள் திட்டத்தில் 8000 ரூபாய்வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் சொன்னதையும்,சொல்லாத திட்டங்களையும் செய்யக்கூடிய
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி மீண்டும் தொடர்வதற்கு வாக்காளர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், விழுப்புரம் மாவட்ட விவசாய அணி தலைவர் அஞ்சாஞ்சேரி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சூரியமூர்த்தி,பாலப்பட்டு சண்முகம்,சக்திவேல், முத்துலட்சுமி, தேமுதிக மாவட்ட பொருளாளர் தயாநிதி, நிர்வாகிள் அருள் முருகன், விஜி, மனோகர், பிரபு, வி.சி.க.மாவட்ட செயலாளர் சிவா,நன்மாறன்,மதிமுக செயற்குழு உறுப்பினர் தேனன்,திமுக ஒன்றிய நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, செல்வமணி, இக்பால், தென்புதுப்பட்டு
ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் குமார், துணைத் தலைவர் வேலுச்சாமி, கொம்மேடு கிளைச் செயலாளர் ஆல்பட்,ஊராட்சி நிர்வாகிகள், மரிசிலின், ஸ்டாலின்,ஆண்ட்ரூஸ் ஏழுமலை, அருண்,
உள்ளிட்டமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp