புதுச்சேரி லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அன்னை அன்னதான அறக்கட்டளை சார்பில், மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு இன்று (03.03.2026) மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.
காலை 11:30 மணியளவில் தொடங்கிய இந்த விழாவிற்கு, அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான P. கணேசன் (G.H.P) தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
துணைத் தலைவர்: K. சவுந்திரராஜன்
செயலாளர்கள்: D. பாரதிராஜா, A. விஜி
பொருளாளர்கள்: G. ராமன், A. சுப்பராயன் (G.H.P)
செயல்வீரர்கள்: ஜெயக்குமார், P. ராஜேந்திரன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), கதிரவன், சரவணி, குமரவேல், வெங்கட்.
இந்த அன்னதான விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். முடிவில், வருகை தந்த அனைவரும் அன்னதானம் பெற்றுச் சென்றனர்.
மாசி மகத் திருவிழா: புதுச்சேரியில் அன்னை அன்னதான அறக்கட்டளை சார்பில் மாபெரும் அன்னதானம்!

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election