April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மர்ம நபர்கள் தீவைப்பு பண மரங்கள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மத்தூர் பதி வீரபத்ர சாமி கோவில் அருகே, மர்ம நபர்கள் வைத்த தீயால் பனை மரங்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர்.
மத்தூர் பதி பகுதியில் உள்ள புகழ்பெற்ற வீரபத்ர சாமி கோவில் சுற்றுவட்டாரக் காலி நிலத்தில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கோடை வெயிலின் தாக்கத்தால் காய்ந்திருந்த புற்களில் பற்றிய தீ, பலத்த காற்றினால் மளமளவெனப் பரவி அங்கிருந்த பனை மரங்களைச் சூழ்ந்தது. இதில் பல ஆண்டுகள் வளர்ந்த பனை மரங்கள் தீயில் கருகிச் சேதமடைந்தன.
தீயணைப்புத் துறையினர்
இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். அவர்களின் சமயோசித நடவடிக்கையால் தீ அருகிலிருந்த மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

செய்தியாளர் முபாரக் 8428723357

Facebook
YouTube
Instagram
WhatsApp