கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் போச்சம்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி அறிவுறுத்தலின்படி, போச்சம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் ரகமத்துல்லா, தனி வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், வட்ட பொறியாளர் தனசேகரன் குழுவினர் போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாளேத்தோட்டம் – சிப்காட் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் டாடா சுமோ கார் ஒன்று நீண்ட நேரமாக ஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையிலேயே நின்று கொண்டிருந்தது.
அதிகாரிகள் அந்த காரை அணுகியபோது, அதிலிருந்த நபர்கள் அதிகாரிகளைக் கண்டதும் காரை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடினர். பின்னர் காரைச் சோதனையிட்டபோது, அதில் மூட்டை மூட்டையாக சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் கார் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டு, போச்சம்பள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, காரின் உரிமையாளர் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!