புதுச்சேரி:
புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ‘நீதிகதிர் எக்ஸ்பிரஸ்’ காலை நாளிதழ் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில செய்தியாளர்கள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று (டிசம்பர் 7) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான கா. சபியுல்லா தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில தலைமை செய்தியாளர் மணிகண்டன், செய்தி ஆசிரியர் எம்.சி. ஆசிக் முஸ்தபா மற்றும் நிர்வாக ஆசிரியர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




விழாவில் டெல்லி சிறப்பு பிரதிநிதியும், புதுச்சேரி மாநில அமைச்சருமான A. ஜான்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதோடு, சிறந்த முறையில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
அமைச்சர் ஜான்குமார் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு செய்தி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், ‘நீதிகதிர் எக்ஸ்பிரஸ்’ தனக்கென உரிய பாணியில் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நாளிதழ் நடுநிலையாக இருந்து, சமூக அக்கறையுள்ள உண்மையான செய்திகளை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். அதேபோல், செய்தியாளர்கள் களத்தில் நின்று உண்மையான செய்திகளை மக்களுக்கு வழங்க வேண்டும்,” என்று கூறி நாளிதழையும், செய்தியாளர்களையும் பாராட்டினார்.
விழாவில் பின்வரும் முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்:
திரு. பூக்கடை கமலக்கண்ணன் (நிறுவனத் தலைவர், புதுச்சேரி ஏழை மக்கள் கழகம்)
திரு. கராத்தே கதிரவன் (குருகுலம் ஆசான், பாரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், திருப்பத்தூர்)
திரு. சாகுல் ஹமீத் (வழக்கறிஞர்)
திரு. பிராங்கிளின் (அரசியல் விமர்சகர், புதுச்சேரி)
திரு. விமல் முருகன் (திரைப்பட ஒளிப்பதிவாளர், ஈரோடு)
கவிஞர் வாலிதாசன் (திரைப்படப் பாடலாசிரியர், சென்னை)
Dr. கீதா (தலைவி, கீதாஞ்சலி பெண்கள் நல சங்கம், புதுச்சேரி)
நிகழ்ச்சியின் முன்னதாக, கராத்தே கதிரவன் குழுவினரின் சிறப்பான தற்காப்பு கலை சாகச நிகழ்ச்சிகள் செய்தியாளர்கள் மத்தியில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.
விருது பெற்றவர்கள்:
விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருதுகளை விழுப்புரம்: ராஜா (எ) ராஜசேகர், முரளி (ஒளிப்பதிவாளர்)
செங்கல்பட்டு: மணிகண்டன்
ராமநாதபுரம்: முகமது சுல்தான்
அரியலூர்: ரவிச்சந்திரன்
திண்டுக்கல்: பாலமுருகன்
வேலூர்: சுரேஷ்
கள்ளக்குறிச்சி (சின்னசேலம்): நடிகர் நரேஷ் (செய்தியாளர் மற்றும் விரைவு செய்தி ஆசிரியர்)
திருச்சி: பிரபாகரன், சித்திரவேல் (ஒளிப்பதிவாளர்)
நாமக்கல்: யுவராஜ்
கோயம்புத்தூர்: முகமது கவுஸ்
சேலம்: சுகுமார் (ஒளிப்பதிவாளர்)
மற்றும் தாமஸ் பெர்னான்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர்.
விழாவிற்கான முழு ஏற்பாடுகளையும் திரைப்பட இயக்குனரும், புதுச்சேரி மாநில தலைமை ஒளிப்பதிவாளருமான அஃனி ஆதவன் சிறப்பாகச் செய்திருந்தார். விருது வழங்கிய நாளிதழின் ஆசிரியர் சபியுல்லா அவர்களுக்கு அனைத்து நிருபர்களும், ஒளிப்பதிவாளர்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!