April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி வில்லியனூர்: முதலமைச்சர் ரங்கசாமியின் ‘ஆசி’ பெற்ற வேட்பாளர் ரவிக்குமார் தீவிர வாக்குச் சேகரிப்பு – திருக்காஞ்சி பகுதியில் உற்சாக வரவேற்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வில்லியனூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் ஆசி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ரவிக்குமார், தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று 02.04.26 வில்லியனூர் தொகுப்பிற்குட்பட்ட திருக்காஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐடிசி (ITC) தொழில் பேட்டை பகுதிகளில் ரவிக்குமார் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் மக்கள் நலத்திட்டங்களையும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொழில் வளர்ச்சித் திட்டங்களையும் எடுத்துக்கூறி, தமக்கு ஆதரவு தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வேட்பாளர் ரவிக்குமார் திருக்காஞ்சி பகுதிக்குள் நுழைந்தபோது, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். குறிப்பாக, தொழில்பேட்டை சார்ந்த குடியிருப்புகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காட்டிய எழுச்சி, ரவிக்குமாரின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

“மக்களின் இந்த பேராதரவு, முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் ஆட்சி மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வில்லியனூர் தொகுதி மக்கள் எனக்கு மிகப்பெரிய வெற்றியைத் தருவார்கள்,” என வேட்பாளர் ரவிக்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த வாக்குச் சேகரிப்பின் போது, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் உடன் சென்று தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp