April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று ஆட்டுப்பட்டி, ரோடியர்பேட்டை ஆகிய பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்காளர்களிடம் துண்டு பிரசரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது வாக்காளர்களிடம் அன்பழகன் அவர்கள் பேசியதாவது:

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் இந்தியா கூட்டணி அழிவு பாதையை நோக்கி சென்று விட்டது.பதவி வெறியில் இந்த கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரஸும் கம்யூனிஸ்ட், விசிகவும் ஒருவரை ஒருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். யூனியன் மாநிலமான புதுச்சேரியில் ஒரு கூட்டணி அமைக்க திராணியற்ற திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அதிமுக பற்றியும் அதிமுகவின் பொதுச் செயலாளர் அவர்களைப் பற்றியும் குறை கூறுவதற்கு எந்த தகுதியும் அருகதியும் கிடையாது . காங்கிரஸ் திமுக கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி இந்த சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உப்பளம் பகுதியில் உள்ள மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் வழங்கப்பட்டது. தற்போது சுத்திகரிக்கப்படாத தண்ணீர் எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டு என்னால் கட்டப்பட்ட டேங்கில் ஏற்றப்பட்டு அந்த நீர் சுத்திகரிக்கப்படாமலேயே மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது‌. இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவான தண்ணீர் அல்ல .அளவுக்கு அதிகமான உப்பும் , தாமிரமும் கலந்துள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களும், கிட்னி கல்லீரல் பாதிப்பு சம்பந்தமான நோய்களும் தொடர்ந்து வருகிறது. வாழ மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீரை வழங்க வேண்டியது அரசு மற்றும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இந்த கடமையும் பொறுப்பும் கூட தற்போது உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு கென்னடி அவர்கள் செய்யவில்லை. நான் மறுபடியும் சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டவுடன் உப்பளம் தொகுதி முழுவதும் நல்ல சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு தடையின்றி விநியோகம் செய்ய பாடுபடுவேன் . இவ்வாறு அவர் பேசினார்

இவ்வாறு அவர் பேசினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp