April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நாட்டார் மங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

செஞ்சி.மார்ச்.05

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மண்டல செயலாளர் தா. ஆனந்த் கூட்டத்திற்கு தலைமையேற்றார்.

செஞ்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் நா.இராசநாயகம்
மயிலம் தொகுதி செயலாளர் மா. ஆனந்த் பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் அசோக், செஞ்சி ஒன்றிய செயலாளர் கோ. ராஜா, மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் ஜே. ராஜா, வல்லம் ஒன்றிய பொருளாளர் கீ. சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தங்கப்பிரகாசம் மற்றும் சத்யராஜ் வரவேற்புரை வழங்கினர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் இலக்கியா கலந்து கொண்டு, கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் செஞ்சி நகர செயலாளர் வீடியோ சரவணன், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் ரா. சிவா, மாநில தொழிற்சங்க அமைப்பு செயலாளர், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் பி.ஜி. சேகர், தமிழ்ச்செல்வன், முத்து, பிரபாகரன், வேல்முருகன், ஜெயராமன், கோவிந்தன், ரங்கநாதன், வெங்கடேசன், சேகர், பச்சையப்பன், புரட்சி முருகன், கதிர்வேல், அசரத், அண்ணாமலை, டைலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியில் பள்ளம் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் நன்றியுரை ஆற்றினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp