திருப்பூர்:ஏப்-06
இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் பேசுகையில்:அவிநாசி தொகுதியில் இணை அமைச்சர் எல். முருகனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.எல். முருகனை 75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அவிநாசி தொகுதியில் வெற்றி பெறச் செய்து அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்க அவிநாசி அத்திக்கடவு திட்டம் 2 செயல்படுத்துவோம். 20 நாட்கள் ஒற்றுமையாக இருந்து அனைவரும் பாடுபட வேண்டும் என கூறினார்.
அவிநாசி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசுகையில்: அண்ணன் எடப்பாடி அவர்கள் ஆட்சியை நல்லாட்சியாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் மக்கள் கடும் துயரத்தில் இருந்து வருகின்றனர். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, எங்கு பார்த்தாலும் உயர்வு என உயர்த்தி திராவிட ஆட்சியில் அவர்களது குடும்பம் தான் உயர்வு அடைந்துள்ளது. திமுகவில் கருணாநிதி தலைவராக இருந்தார், தற்போது ஸ்டாலின் தலைவராக இருக்கிறார், அடுத்து உதயநிதி தலைவராக இருப்பார் ,அதற்குப்பின் இன்ப நிதி தலைவராக இருப்பார். ஆனால் நமது தேசிய ஜனநாயக கட்சியில் அப்படி இல்லை அடிப்படை உறுப்பினர் கூட மிக முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். அவிநாசியை நாம் வளர்ந்த பகுதியாக உயர்த்த வேண்டும். அதற்கு மத்தியிலும் தேசிய ஜனநாயக ஆட்சி வேண்டும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக ஆட்சி வேண்டும். நாம் இரட்டை இஞ்சின் சர்க்கார் ஆக செயல்பட்டு நமது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசுகையில்: அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவியுடன் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் நிறைவேற்றினார். ஆனால் அதனை திமுக அரசை கிடப்பில் போட்டுவிட்டது. மீதம் 10% வேலையை செய்வதற்கு திமுக ஆட்சிக்கு நாலு வருடம் தேவைப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் முழுமையாக அனைத்து குட்டையம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக அதனை நிறைவேற்றுவோம் என்றார். அவிநாசி பகுதியில் சிறு விசைத்தறி நிறுவனங்களும், பனியன் நிறுவனங்களும் இயங்கி வருகின்றது. இவர்களுக்கு பெரும் இடியாக மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தி உள்ளது. அதனால் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளது. அவிநாசி பகுதிக்கு பொறுப்பாளராக ராசா, அவர்களையும் செந்தில் பாலாஜி அவர்களையும் நியமித்து உளளார்கள். அவர்களது பின்னணி என்ன என அனைவருக்கும் தெரியும். நீங்கள் அனைவரும் பேச தயங்குகிறீர்கள், நேற்றைய தினம் ராசா அவர்களின் வீடியோவும், ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2ஜி ஊழலில் யார், சம்பந்தப்பட்டுள்ளார்கள் அந்த பணம் யார் யாருக்கு சென்று உள்ளது என்பது அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவத்தால் மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். எனவே வரும் தேர்தலில் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் நாங்கள் நிச்சயமாக 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக ஆக்குவோம் எனக்கூறி முடித்தார்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..