April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூரில்

தெற்கு சட்டமன்ற உறுப்பினா் அலுவலகம் திறப்பு!!

திருப்பூர், மார்ச்- 5
திருப்பூர் பார்க் ரோட்டில் ரூ.1.7 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள தெற்கு சட்டமன்ற உறுப்பினா் அலுவலகம், இ சேவை மையம் மற்றும் காத்திருப்போர் அறை, கணினி அறைகளுடன் கூடிய கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ், செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனா். தொடா்ந்து எம்.எல்.ஏ. அலுவலக அறை உள்ளிட்டவைகளை பார்வையிட்டனா்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், தெற்கு மாநகர செயலாளா் டி.கே.டி.மு.நாகராஜ், கவுன்சிலா்கள் செந்தூர்முத்து, பி.ஆர்.செந்தில்குமார், கல்வி குழு தலைவர்.திவாகரன் பல்லடம் கிருஷ்ணமூர்த்தி.
மற்றும் பகுதி செயலாளா்கள் மேங்கோ பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, மு.க.உசேன், மியாமி அய்யப்பன், மாநகர மாணவரணி அமைப்பாளா் திலகராஜ்,
வழக்கறிஞா் அணி அமைப்பாளா் பார்த்திபன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளா் கலைச்செல்வி மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

Facebook
YouTube
Instagram
WhatsApp