April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை தொண்டரின் அதிரடி முயற்சி – மாவட்ட செயலாளர் ராஜ்குமாரை வியக்க வைத்த தவெக தொண்டன்!!

கோவை :மார்ச்- 10

தமிழக அரசியலில் தடம் பதித்து வரும் தமிழக வெற்றிக் கழகம், தற்போது கோவையில் நடைபெற்ற “பைக் விழிப்புணர்வு மாரத்தான்” பேரணி மூலம் ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தவெக-வின் அடிப்படை தொண்டரான ஏ.ஆர்.ரீகன் (A.R.Reegan) என்பவர் முன்னெடுத்து மாபெரும் மாரத்தான் நிகழ்வாக மாற்றிக் காட்டியுள்ளார்.

கோயம்புத்தூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் பாதுகாப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் “Queen on Roads: Breaking Barriers – Awareness on Wheels” என்ற சிறப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ராலி காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ராலியானது கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பரியல் மைதானத்தில் துவங்கியது. இதனை தவெகவின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு ராலியை துவக்கி வைத்தார். இந்த ராலியானது, ஆர். எஸ் புரத்தில் இருந்து துவங்கி அங்கிருந்து பெண்கள் பைக் ராலி மூலம் நகரில் விழிப்புணர்வு பரப்பி தொண்டாமுத்தூர் பகுதிவரை சுமார் 16 கிலோ மீட்டர் வரை நிறைவு செய்தனர்.

இந்த நிகழ்வு மூலமாக International Women’s Day கொண்டாட்டத்தில்
பெண்கள் பாதுகாப்பு முன்னேற்றம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக ‘Say No to Drugs’ என்ற செய்தியை பொதுமக்களுக்கு கொண்டு சென்றனர். இந்த விழிப்புணர்வு ராலியில் பல பெண்கள் பைக் ரைடர்கள் பங்கேற்றனர். சமூக நலன் கருதி நடத்தப்படும் இந்த நிகழ்வு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஏ.ஆர்.ரீகன் அவர்கள் இந்தியாவில் உள்ள நான்கில் இரண்டு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது. அப்துல் கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் (Kalam’s world record) பங்கு பெற்றுள்ளார். மோட்டார் ஸ்போர்ட்ஸில் அதிக அனுபவம் கொண்டவர். இந்த நிகழ்வின் வெற்றியில் பிரதிபலித்தது. வழக்கமான அரசியல் ஊர்வலமாக இல்லாமல், சர்வதேச தரத்திலான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஒழுக்கத்துடன் இந்தப் பேரணி நடைபெற்றது.

தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் நற்பெயருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், கோவையில் ஒரு “அமைதிப் புரட்சியை” இந்த Motorsports நிபுணர் ஏ.ஆர்.ரீகன் நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
YouTube
Instagram
WhatsApp