சேலத்தில் வேட்பாளருக்குச் செருப்பு சுமந்த உதவியாளர் -ஆணவமா? – அதிமுகவில் வெடித்த சர்ச்சை.
பரபரப்பான 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், சேலம் தெற்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வினோத் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது, அவரது உதவியாளர் செருப்பைச் சுமந்து வந்த சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் நாளை மனுத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், சேலத்தில் கட்சியின் உள்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, சேலம் தெற்குத் தொகுதிப் பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரத்தை ஓரங்கட்டிய சிட்டிங் எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியம் தரப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வினோத் தரப்பினர் பெரும் கூட்டத்தைத் திரட்டித் தங்களது பலத்தை நிரூபித்தனர்.
கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்குத் தனது குடும்பத்தினருடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வினோத், அலுவலகத்திற்குள் நுழையும்போது காலில் செருப்பு அணியாமல் வந்துள்ளார். மனுத் தாக்கல் செய்யும் புனிதமான இடமாகக் கருதி அவர் அவ்வாறு வந்தாரா அல்லது அவசரத்தில் வந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், அவர் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே அவரது உதவியாளர் ஒருவர் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட செருப்பை கையில் ஏந்தியபடி பதற்றத்துடன் அலுவலகத்திற்குள் ஓடிவந்தார்.
வாசல் கேட்டில் நின்றிருந்த போலீசார் அந்த உதவியாளரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, “வேட்பாளருக்குச் செருப்பு கொண்டு போகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை உள்ளே அனுமதித்தனர். உள்ளே சென்ற உதவியாளர், கவரில் இருந்த செருப்பை எடுத்து மிகவும் பவ்யமாக வேட்பாளர் வினோத் முன்னால் வைக்க, அதனை அவர் அணிந்து கொண்டு சென்றார். உள்கட்சி மோதல்களுக்கு இடையே பலத்தைக் காட்ட நினைத்த வேட்பாளர், ‘செருப்பு விவகாரத்தால்’ தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

More Stories
காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என்னார் காங்கிரஸ் தொகுதி தலைவர் தணிகைவேல் என்ற குமார் தலைமையில் கூட்டணி கட்சி ஜே சி எம் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என் ஆர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் என பல தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தனர் இதில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி பாஜக தேர்தல் பணிமனை திறப்பு விழா…
காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்