வந்தவாசி, டிச 03:
சென்னை பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம் ( VISTAS) சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம், ஆதிதிராவிடர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக திரக்கோயில் கிராமத்தில் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான DST SEED STI HUB மையம் ( DST/SEED//SCSP/STI / 2022/937) மூலம் ‘நிலக்கடலை மற்றும் உளுந்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் /மதிப்பு கூட்டலை மேம்படுத்துவதற்கான பயிற்சி’ நவம்பர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் VISTAS DST SEED STI- HUB மையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியரும், இயந்திரவியல் துறையின் இயக்குனரும், பதிவாளருமான DST விதை STI – HUB முதன்மை ஆய்வாளருமான முனைவர் எம்.சந்திரசேகரன் நிகழ்வை தொடங்கி வைத்து வரவேற்றார். மேலும் இந்த மையத்தின் சாதனைகளையும் மற்றும் விவசாயிகள் லாபம் ஈட்டும் பயிர்களான நிலக்கடலை மற்றும் உளுந்தை மதிப்பு கூட்டி அதிகப்படியான லாபங்களை பெறும் வழிமுறைகளை விளக்கினார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் எம்.பாஸ்கரன் தொடக்க விழாவில் பங்கேற்று, பல்வேறு விதமான பயிர் அமைப்பு முறை தொழில் நுட்பங்களை விளக்கி, ஆலோசனைகளையும் வழங்கி, பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து சான்று உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
முதல் நாள் பயிற்சியினை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை புல அலுவலர் முனைவர் எம்.அன்பரசு மற்றும் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியர் ஜி.அமுதா மற்றும் இரண்டாம் நாள் பயிற்சியினை வேல்ஸ் பல்கலைக்கழக வணிகவியல் துறை முனைவர் எ.நவிதா சுல்தானா மற்றும் இயந்திரவியல் துறையில் பணிபுரியும் முனைவர் ஜி.சதீஷ்குமார் ஆகியோர் வேளாண்மை விளைப் பொருளான நிலக்கடலை மற்றும் உளுந்து பயன்படுத்தி பல்வேறு விதமான உணவுப் பொருட்களை தயாரித்தலையும் அதை சந்தைப்படுத்தி அதிக லாபம் ஈட்டுவது பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர். மேலும் இப்பயிற்சியில் DST STI- HUB திரக்கோயில் கிராமத்தில் பணி புரியும் இரா.விஜயகுமார், வி.லக்ஷ்மி, பூவரசன், பிரசாந்த், இளையபெருமாள் மற்றும் ஏ.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் தெள்ளாறு ஒன்றியத்தின் கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். இறுதியில் திரக்கோயில் முனைவர் பி.சம்பத்குமார் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!