April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

கோவை மார்ச்:10

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான விளையாட்டு விழா சங்கரா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் மற்றும் வெளிவிவகார இயக்குனர் முனைவர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி துவக்கி வைத்தார்.

மாணவர்களின் அணி வகுப்பு அனைவரையும் கவர்ந்த்து விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழா துவங்கப்பட்டது.சிறப்பு விருந்தினர் கூறுகையில்,விளையாட்டு ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.வெற்றி தோல்வியைத் தாண்டி போட்டிகளில் அர்ப்பணிப்புடன் மாணவர்களை பங்கேற்குமாறு ஊக்குவித்தார்.

மேலும் 4×100 மீட்டர் தொடர் ஓட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டது.சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர்.சி.பாலசுப்பிரமணி ஆண்டறிக்கையை வாசித்தார்.

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் துணை இணைச் செயலர் திருமதி நித்யா ராமச்சந்திரன் விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராதிகா வாழ்த்துரை வழங்கினார்.துணை முதல்வர் முனைவர் பெர்னார்ட் எட்வர்ட் முன்னிலை வகித்தார்.

மேலும் பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை இளங்கலை மேலாண்மைத்துறை (BBA CA) மாணவாகளும் இரண்டாவது ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை B.Com CA) இளங்கலை வணிகவியல் கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவாகளும் தட்டிச் சென்றனர்.கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர்.சி.பாலசுப்பிரமணி நன்றியுரையாற்றினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp